கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்பு பாடசாலையில் சீர்செய்யப்பட்ட மேடை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது
மன்னார், தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்புப் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாழடைந்த மேடை கடற்படையினரின் தொழிநுட்ப பங்களிப்புடன் சீர்செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 12,) வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார், தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்புப் பாடசாலையில் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில் கடற்படையினரின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அப்பகுதி பிரமுகர்களின் நிதியுதவியுடன் இந்த மேடையின் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, குறித்த மேடையின் சீரமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கப்பட்டு இன்று (2024 ஆகஸ்ட் 12,) மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் சமய குருமார்கள், தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்புப் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.