இலங்கை கடற்படை நாய்கள் காப்பகத்திற்கு இரண்டு பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்க்குட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாய்கள் காப்பகத்திற்காக (Military Working Dog Unit – MWD) இரண்டு (02) பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்க்குட்டிகள் மற்றும் உபகரணங்களை 2024 ஆகஸ்ட் 9 ஆம் திகதி கேப்டன் எரல்ட் தர்மரத்ன (Master Mariner) வழங்கியதுடன், கடற்படை காலாட்படையின் பதில் தளபதி கொமடோர் சனத் பிடிகல குறித்த நன்கொடையை பெற்றுக்கொண்டார்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நடவடிக்கைகளில், சிறப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படை நாய்கள் படையணியின் நாய்களின் பங்களிப்பு பெறப்படுகிறது. இதன்படி, பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்கள் இனத்தைச் சேர்ந்த கூரிய நுண்ணறிவும், சுறுசுறுப்பும், மிகவும் வலிமையும் கொண்ட இந்த நாய்க்குட்டிகளின் சேவை எதிர்காலத்தில் கடற்படையால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு திறமையாகவும் சிறப்பாகவும் அமையும்.

மேலும், கேப்டன் எரல்ட் தர்மரத்ன இரண்டு பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்க்குட்டிகளுடன் உயர்தர நாய் உணவு, விட்டமின்கள், மைக்ரோசிப் அடையாள உதவி மற்றும் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களையும் 05 நாய் கூடுகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.