முதலாவது சேவா வனிதா சிங்கர் காட்சியறை வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது
கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், முதலாவது சேவா வனிதா சிங்கர் காட்சியறையின் திறப்பு விழா இன்று (2024 ஆகஸ்ட் 07) கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் கீழ் சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவியின் பூரண மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், கடற்படை வீரர்களுக்கு மின் மற்றும் மின்னணு உபகரணங்களை எளிதான கட்டண அடிப்படையில் வாங்குவதற்காக, சிங்கர் நிறுவனம் உடன் இணைந்து சேவா வனிதா பிரிவினால் வெலிசர கடற்படை வளாகத்தில் நிறுவப்பட்ட முதல் கடற்படை சேவா வனிதா சிங்கர் காட்சியறையை திறந்து வைக்கும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் கெளரவ தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும், இந் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, சிங்கர் நிருவனத்தின் பணிப்பாளர் (விற்பனை) திரு. வஜிர தென்னகோன், சேவா வனிதா செயற்குழு உறுப்பினர் திருமதி பிரியங்கா குமாரசிங்க உட்பட மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.