இந்திய கடற்படையின் ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 4) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அதன் செயல்பாட்டு செயல்திறன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை வீரர்கள் கலந்துகொண்டதுடன், குறித்த கப்பலின் கடற்படையினர்கள் இலங்கையில் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் சென்றனர்.

மேலும், வெளிநாட்டு கடற்படையினரின் இத்தகைய நட்புரீதியான விஜயங்கள் மூலம் நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க இது பெரும் உதவியாகவும் உள்ளது.