கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் புதுப்பிக்கப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதான வளாகத்தில் நடைபெற்றது.

நீட் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனத்திடம் NEAT SOLUTIONS (PVT) LTD இருந்து பயன்படுத்த முடியாத இரண்டு மோட்டார் வண்டிகள் கடற்படைக்கு வழங்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின்படி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் குறித்த இரண்டு மோட்டார் வண்டிகளின் ஒரு மோட்டார் வண்டி 05 மாத காலப்பகுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு கடற்படையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டது.

அதன்படி, புதுப்பிக்கப்பட்ட இந்த சூரிய மின்சக்தி மோட்டார் வண்டி கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தில் பயன்பாட்டுக்காக பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை நீர்வள கோல்ப் விளையாட்டு மைதானத்தில் கடற்படை தளபதி தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்த நிகழ்வுக்காக, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கொமடோர் தனேஷ் பத்பேரிய, கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர) கொமடோர் புத்திக ஜயவீர, கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் புத்திக ரந்திமால், நீட் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமாண்டர் டி.வி.சி.பி பவுலிஸ் (ஓய்வு) மற்றும் அதன் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.