அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவிச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்தனர்

அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவி செயலாளர் திருமதி Karen Radford, 2024 ஜூலை 30ஆம் திகதி கொழும்பு டொரிங்டனில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ திரு.பிரமித பண்டார தென்னகோனை அவர்களைச் சந்தித்தார்.

வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியங்களுக்கான உதவிச் செயலாளருடன் வந்திருந்த அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. Lachlan Sillar, கொள்கை அதிகாரி திரு. Noah Diamantopoulos மற்றும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston உட்பட ஆவுஸ்திரேலிய தூதுக்குழு, அமைச்சர் தென்னகோன் அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடலில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டின் இலங்கையின் நீரியல் சேவையின் திறனை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் முதல் கட்டமாக Shallow-Water Multi-Beam Echo Sounder மற்றும் அதனுடன் தொடர்புடைய அளவீட்டு கருவிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. என குறித்த கலந்துரையாடலில் திருமதி Radford அவர்கள் அறிவித்தார். மேலும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் முதல் தடவையாக நடத்தப்பட உள்ள 'பாதுகாப்பு உரையாடலுக்கான' தற்போதைய ஏற்பாடுகள் குறித்தும் அங்கு கலந்துறையாடப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் குறித்த சவால்களை சமாளிப்பதற்கு தேவையான உறவுகள் போன்ற பல இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Photo courtesy: MOD Media