இந்திய கடற்படையின் ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 02,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Shalki’என்ற நீர்மூழ்கிக் கப்பல், 64.4 மீற்றர் நீளம் மற்றும் மொத்தம் நாட்பது (40) கடற்படையினர்களைக் கொண்டுள்ளதுடன், அதன் கட்டளை அதிகாரி கமாண்டர் Commander Rahul Patnaik க்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (02 ஆகஸ்ட் 2024) கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படையினர் அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர், மேலும் நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் இலங்கையில் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் 2024 ஆகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை விட்டு புறப்பட உள்ளது.