கடற்படை மூலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் இரத்தக்கூழ்மப்பகுப்பு பிரிவில் மருத்துவ தர நீர் சுத்திகருப்பு இயந்திரமொன்றை நிறுவப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று (01) 2024 ஜூலை மாதம் 31 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் இரத்தக்கூழ்மப்பகுப்பு பிரிவில் நிறுவப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இத்திட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட இந்த இருபத்தி ஒன்பதாவது (29) மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் 15 சிறுநீரக நோயாளிகள் ஒரே நேரத்தில் இரத்தக்கூழ்மப்பகுப்பு செய்வதோடு, மேலும் இருபது (20) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன்கொண்டது.

மேலும், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் திரு.அசேல குணவர்தன அவர்கள் கடற்படை சமூகப் பணித் திட்டத்தின் சிரேஷ்ட இணைப்பாளர் கொமான்டர் புத்திக ரந்திமால், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திரு. தம்மிக்க அழகப்பெரும அவர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் கடற்படை சமூகப் பணித் திட்டத்தின் கடற்படைப் பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.