கடற்படையின் பங்களிப்புடன் அனுராதபுரம் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தில் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2024 ஜூலை 28) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் நன்கொடையாளர்களின் நிதி பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் சமூக நலத்திட்டத்தின் மற்றுமொரு அத்தியாயமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, சிரச கம்மெத்த நடவடிக்கையின் கீழ், வைத்தியர் திருமதி ஸ்ரீமதி குணதிலக்கவின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 1022வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2024 ஜூலை 28,) அனுராதபுரம் மாவட்டத்தின் தபுத்தேகம குடா பெல்லன்கடவல கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதன் மூலம் குடா பெல்லன்கடவல கிராம மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.