வடமேற்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக கொமடோர் தம்மிக்க விஜேவர்தன பொறுப்பேற்றார்

வடமேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கொமடோர் தம்மிக்க விஜேவர்தன இன்று (2024 ஜூலை 27,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

கடற்படையின் மரபுப்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கொமடோர் தம்மிக்க விஜேவர்தனவை வரவேற்ற பின்னர் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க கட்டளைத் தலைமையகத்தில் புதிய பதில் கட்டளைத் தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க கடற்படை மரபுப்படி வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.