கடற்படையினரின் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித்திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தில் பலுகஸ்வெவ மற்றும் கெக்கிராவ பகுதிகளில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 ஜூலை 26 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவது ஒரு சிறந்த சமூக சேவையாகும். அதன் மற்றொரு பகுதியாக சுகாதார அமைச்சு தலைமையின் கீழ், ஜனாதிபதி அலுவலகத்தின் நிதியுதவி மற்றும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1020வது மற்றும் 1021வது நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 ஜூலை 26 ஆம் திகதி பலுகஸ்வெவ, கும்பக்வெவ கிராமம் மற்றும் கெக்கிராவ, ஷ்ராஸ்திரவெலிய கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், இந்த நிவாரண எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டதன் மூலம் கும்புக்வெவ மற்றும் ஸ்ராஸ்திரவேலிய மக்கள் தமது சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.