சிறுவர்களுக்கான நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையினரால் மட்டக்களப்பு பகுதியில் சிறுவர்களுக்கான நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று 2024 ஜூலை மாதம் 25 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடற்படை பல் மருத்துவ சேவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி மட்டக்களப்பு கிரிமிச்சையோடாய் தமிழ் கல்லூரி, மதுரன்கர்ணிகுளம் தமிழ் கல்லூரி மற்றும் வாகரை கொக்குவில் தமிழ் கல்லூரி மானவர்களின் நல்ல வாய்வழி சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டதுடன், நூற்றி ஐம்பத்தாறு (156) மானவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல் மருத்துவ மனைகளும் நடத்தப்பட்டன.
மேலும் கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் யுனிலீவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த நடமாடும் பல் மருத்துவ சேவையில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் காஷியப்ப நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஏ.எல்.ஜி.சி.என். சுமேத, கப்டன் பல் சேவைகள் திணைக்களம் (கிழக்கு) கப்டன் (சத்திரசிகிச்சை நிபுணர்) ஆரியவங்ச ஹேரத், கடல் ஆதிவாசி கிராமத்தின் தலைவர் வேலாயுதன் மற்றும் கடற்படைக் குழுவினரும் கலந்துகொண்டனர்.