ஆசிய பிராந்தியத்தில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவப்பட்ட ஒத்துழைப்பின் (ReCAPP) குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
ஆசிய பிராந்தியத்தில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவப்பட்ட ஒத்துழைப்பின் (Regional Cooperation Agreement on Combating Piracy and Armed Robbery against Ships in Asia - ReCAAP) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற குழுக் கூட்டம் இன்று (2024 ஜூலை 25) கொழும்பு பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் வெற்றிகரமாக நிறைவுற்றது.
அதன்படி, 2024 ஜூலை 22 முதல் 25 வரை கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் 2024 ஜூலை 23 ஆம் திகதி ; Situation Update on piracy and armed robbery against ships in Asia, Preparedness to combat piracy and armed robbery against ships including timely/ accurate incident report, Case study on the investigation outcome of the incident “Loranzo Putha 4”, Preparedness to combat piracy and armed robbery against ships including timely reaction against the incident, addressing the root cause of piracy and armed robbery against ships, engagement with counterparts in neighbouring countries, Preparedness to combat piracy and armed robbery against ships and efforts to information sharing, Preparedness to combat piracy and efforts to fortify the security in its port/ Anchorage සහ Preparedness to combat piracy and efforts on timely/ accurate incident report and problem faced by the industry என்ற கருப்பொருள்களின் கீழ் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தக் குழுக் கூட்டத்தில் 2024 ஜூலை 24 ஆம் திகதி Engagement with Sri Lanka authorities and shipping industry on piracy and armed robbery against ships and perspective on the Sri Lanka maritime security; என்ற கருப்பொருளின் கீழ், இந்தியா மற்றும் பங்களாதேஷ் தரப்பினர் விளக்கக்காட்சிகள் மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஆசிய பிராந்தியத்தில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதில் முன்னேற்றம், பங்குதாரர்களின் தயார்நிலை, பிராந்திய சம்பவங்கள் பற்றிய அறிக்கைகள், வழக்கு ஆய்வுகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பாதுகாப்பு நடைமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. சவால்கள் கருத்துக்கள், தகவல் மற்றும் அனுபவப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
ஆசிய பிராந்தியத்தில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவப்பட்ட ஒத்துழைப்புக்கு (ReCAPP) தொடர்புடையதாக இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வெளிவரும் கடற்கொள்ளையர் மற்றும் ஆயுதக் கொள்ளை சவால்கள் உட்பட பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களுக்கு கூட்டாக வெற்றிகரமாக பதிலளிக்க வேண்டிய புதிய அறிவு, அனுபவங்கள், உத்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பகிர்தல் மற்றும் பிராந்திய கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகள் பங்குதாரர்கள் பயனடைவார்கள்.