கடற்படையினரின் தொழிநுட்ப பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்ட கம்புருபிட்டிய இளங்கம்கொட புராதன ரஜமஹா விகாரையின் சங்கவாச கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்ட கம்புருப்பிட்டிய சபுகொட இளங்கம்கொட புராண ரஜமஹா விகாரையின் சங்கவாச கட்டிடம் இன்று (2024 ஜூலை 24,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் ஆலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கம்புருபிட்டிய சபுகொட இளங்கம்கொட புராண ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி அக்கமஹா பண்டித சாஸ்த்ரபதி வணக்கத்திற்குரிய ஒமாரே கஸ்ஸப அனுனாஹிமி தேரரின் வழிகாட்டலின் கீழ், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் இந்த கட்டிடத்தின் கட்டுமான நடவடிக்கைகள் 2023 ஜூன் 21 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி, ஒரு சமையலறை, ஒரு அங்காடி அறை மற்றும் சாமனேர துறவிகள் தங்கும் விடுதி ஆகிய வசதிகளுடன் கூடிய இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் துரித கதியில் நிறைவடைந்ததையடுத்து, இன்று (2024 ஜூலை 24) கடற்படைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர், தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா, பதில் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் கொமடோர் ரவி குணசிங்க மற்றும் கடற்படைத் தலைமையகத்தின் மற்றும் தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.