ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் அலுவலகத்தில் தலையீட்டின், ஜப்பான் அரசாங்கம் மூலம் இலங்கை கடற்படைக்கு ரிப் (RHIB) படகொன்று வழங்கப்பட்டது

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் தலையீட்டின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு ரிப் (RHIB) படகொன்று நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இன்று (2024 ஜூலை 19) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு.MIZUKOSHI Hideaki அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் கடல்சார் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்பட்ட தரப்பினரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றது.

அதன்படி, இலங்கை கடற்படை மூலம் சிறப்பு படகுகள் படையணி பயன்படுத்தி கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு பாதுகாப்பாக ஏறுதல், தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கடற்படைக்கு ரிப் (RHIB) படகொன்று இன்று (2024 ஜூலை 19) வழங்கப்பட்டது.

மேலும், இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் யுகி யோகோஹாரி, போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.