யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமம் ஆலயம் வரையிலான பாத யாத்திரையின் பின்னர், கடற்படையினர் குமண தேசிய பூங்காவை சுத்தப்படுத்தும் விசேட திட்டமொன்றை மேற்கொண்டனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களால் அகற்றப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளை சேகரித்து சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஜூலை 17 ஆம் திகதி குமண தேசிய பூங்காவின் பகுரே கலப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்ட இந்த சுத்தப்படுத்தும் திட்டத்தில் கடற்படையினரிடம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் அப்புறப்படுத்திய பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளை கடற்படையினர் சேகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பகுதியிலிருந்து அகற்றினர்.
மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.