சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை பணியாளர், கல்லூரியின் கட்டளை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு
சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில டோல் இன்று (2024 ஜூலை 16,) கடற்படைத் தலைமையகத்தில், உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியினால் பாரம்பரிய முறைப்படி கடற்படை தளபதியை சந்திப்பதற்காக. பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.