சீஷெல்ஸ் குடியரசின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் (Brigadier Michael Rosette) அவர்கள் எட்டு (08) நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 14) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்தடைந்ததுடன், கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர), கொமடோர் பிரசாத் ஜயசிங்க, அவரை அன்புடன் வரவேற்றார்.