மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இன்று (2024 ஜூலை 12,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சமன் பெரேரா, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்டைத்தார்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளால் பாராட்டப்பட்ட பின்னர், கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் சமன் பெரேரா மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.