துருக்கி குடியரசின் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2024 ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்த துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு கடற்படைப் பயிற்சியின் பின்னர் குறித்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை செய்தனர்.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாரிக் கொள்வது போன்ற கடற்படைப் பயிற்சிளை வெற்றிகரமாக மேற்கொண்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை நிமித்தமான சந்திப்புகளை நடத்திய பின்னர் பயிற்சிகள் முடிவடைந்தது.

மேலும், 'TCG KINALIADA' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், வெளிநாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான விஜயங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதோடு, குறித்த நாடுகளின் இராஜதந்திர உறவுகளை வழப்படுத்தவும் பங்களிப்புச் செய்வது மற்றுமன்றி கப்பல்களுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் புதிய அறிவும் அனுபவமும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. எதிர்காலத்தில், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க இது பெரும் உதவியாக அமையும்.