துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 9) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'TCG KINALIADA' என்ற கப்பல் 99.5 மீற்றர் நீளமும் மொத்தம் 152 கடற்படையினரை கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Serkan DOGAN பணியாற்றிகிரார்.
மேலும், 'TCG KINALIADA' என்ற கப்பலின் தளபதியான கமாண்டர் Serkan DOGAN மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2024 ஜூலை 09,) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், 'TCG KINALIADA' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 2024 ஜூலை 11 அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளதுடன், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலொன்றுடன் குறித்த கப்பல் கடற்படை பயிற்சியொன்றில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.