கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையின் ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு, குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் தேவையான வசதிகளை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் கடற்படையினரால் வழங்கப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளையும் அவதானிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 2024 ஜூலை 03 ஆம் திகதி, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் பங்கேற்றார்.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள மற்றைய அரசு நிறுவனங்களுடன் தென்கிழக்கு கடற்படை கட்டளையும் ஒருங்கிணைந்து, பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க தெற்கு கடற்படை கட்டளை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கடற்படையினர் பக்தர்களுக்கு வழங்கி வரும் வசதிகள் மற்றும் சேவைகளை அவதானித்த கடற்படைத் தளபதி, ஒகந்த பிரதேசத்தில் உள்ள கதிர்காமம் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளை மேற்கொண்டு பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். பின்னர், 2024 ஜூலை 05, அன்று, கடற்படைத் தளபதி கதிர்காமத்திற்கு வந்து கதிர்காமம் கிரிவெஹரவை வணங்கி சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.

மேலும், ருஹுனு மஹா கதிர்காம விகாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்ற கடற்படை தளபதி வெடசிடி கந்த ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்து, மேற்படி விகாரையின் விஹாராதி சாஸ்திரபதி ஹீல்லே ஞானானந்த தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை ரியர் அட்மிரல் சந்திம சில்வா, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, பணிப்பாளர் நாயகம், வழங்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் ருவன் களுபோவில உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன், 2024 ஜூலை 11 ஆம் திகதி இறுதிவரை பாத யாத்திரையில் பங்குகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து வழங்குவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.