கடற்படை நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் கடற்படை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன

பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் இலங்கை கடற்படையின் கடற்படைக் கல்விப் பாடநெறிகள் மற்றும் வணிகக் கடல்சார் கற்கைநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், 2024 ஜூன் 29 ஆம் திகதி வெலிசர 'வேவ் என்' லேக்' நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளை 2017 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் கடற்படைக் கல்விப் பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, ஏழாவது தடவையாக (07) நடைபெற்ற இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் 2023-2024 கல்வியாண்டுகளில் கடற்படை துறையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய 5 அதிகாரிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்பயிற்சிநெறியில் வெளிப்படுத்தப்பட்ட விசேட திறமைகளை பாராட்டி பிரித்தானிய கடற்படை நிறுவகத்தின் இலங்கைக் கிளையின் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெற்ற நீண்ட ஆயுத நிபுணத்துவ பாடநெறியின் லெப்டினன்ட் கமாண்டர் லஹிரு சம்பத் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சதீர பெரேரா ஆகியோர் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் வணிகக் கப்பல் பணிப்பாளர் நாயகம் திரு பிரித்தானிய கடற்படை நிறுவகத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், அந்த அதிகாரிகளுக்கு கடற்படை நிறுவனத்தின் அங்கத்துவம் வழங்கப்பட்டது.

மேலும், அட்மிரல் சிசில் திசேரா (ஓய்வு), அட்மிரல் தயா சந்தகிரி (ஓய்வு), வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க, கடற்படை பயிற்சிப் பணிப்பாளர் கொமடோர் புத்திக ஜயவீர பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் உறுப்பினர்கள் குழு மற்றும் இலங்கைக் கிளையினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.