கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையினரால் வசதிகள் வழங்கப்பட்டன
யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமத்திற்கு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரையில் பங்குபற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையால் இன்று (ஜூன் 30, 2024) தொடங்கியது. குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓய வரையிலான பாதையில் பயணிகளின் தேவைகளை வசதிகள் கடற்படையினர் குறிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த வசதிகள் ஜூலை 11 வரை தொடரும்.
அதன்படி, தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் மேற்பார்வையின் கீழ், குமண தேசிய பூங்கா நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஒய வரையிலான பாதையில் பக்தர்களுக்கு மருத்துவ சேவைகள், உயிர்காக்கும் உதவிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதிகளை வழங்குவதில் கடற்படை மற்ற அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும்.
மேலும், குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் இந்து சமயப் பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.