தெல்கொட தெமாகலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது

தெல்கொட, தெமாலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் மாணவர் தலைவர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 2024 ஜூன் 27 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் குறித்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மஹமெவ்னாவ பௌத்தக் கல்லூரியில் மாணவர் தலைவரின் உத்தியோகபூர்வ சின்னம் அணிவிக்கும் நிகழ்விற்காக கடற்படைத் தளபதி உட்பட, மாணவர்கள் மற்றும் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியப் பணியாளர்கள் கலந்து கொண்டதுடன், கல்லூரியின் கலாச்சார நடனக் குழுவினரின் வண்ணமயமான நடனத்தைத் தொடர்ந்து பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பின்னர், மாணவர் தலைவர் பதக்க விழாவின் போது, நாற்பத்தைந்து (45) மாணவ தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கப்பட்ட கடற்படைத் தளபதி, சம்பிரதாயக் கூட்டத்தில் உரையாற்றி, பள்ளி நாட்களிலிருந்தே தலைமைப் பண்புகளை மேம்படுத்துவது மற்றும் ஆளுமைக்கு தேவையான பண்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் குறித்து ஒரு சுவாரஸ்யமான விரிவுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் அதிபர் கௌரவ மகா சங்க ரத்னாய அவர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.