இந்திய கடற்படைக் கப்பல் INS 'KAMORTA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுச் சென்றது

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக திருகோணமலை துறைமுகத்திலிருந்து தீவுக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான INS 'KAMORTA' கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படை கப்பல்கள் சமுதுராவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (ஜூன் 23, 2024) தீவை விட்டு புறப்பட்டது. குறித்த கப்பலுக்கு, திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

INS 'KAMORTA' தீவில் தங்கியிருந்த போது, கப்பலின் தளபதியான கமாண்டர் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சனா பனகோடா ஆகியோருக்கு இடையில். 2024 ஜூன் 20, அன்று கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ கூட்டம் நடைபெற்றது.

மேலும், INS 'KAMORTA' கப்பலின் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களுக்குச் சென்று சர்வதேச யோகா தினத்திற்கான நிகழ்ச்சிகளை நடத்தி, கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றனர். கடற்படையினர் மற்றும் பாடசாலை மாணவர்களும் கப்பலின் செயற்பாடுகளை அவதானிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர்.

மேலும், INS 'KAMORTA' உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த்தன் பின்னர் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுரவுடன் இணைந்து நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் (PASSEX) போது, கப்பல்களுக்கு இடையே செய்தி பரிமாற்றம் மற்றும் கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் போன்ற மரியாதைகளை செலுத்திய பிறகு பயிற்சி முடிவுக்கு வந்தது.

மேலும், வெளிநாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும், மேலும் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள், எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும்.