உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கடற்படையின் நடமாடும் பல் மருத்துவ சேவை
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படையினர் வட மத்திய கடற்படை கட்டளையில் 2024 ஜூன் 13, 14, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு நடமாடும் பல் சேவையொன்று மேற்கொண்டனர்.
அதன்படி, கடற்படை பல் மருத்துவ சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி; மெதவச்சி, அம்பகஹவெவ ஆரம்ப பாடசாலை, புனேவ ஸ்ரீ ராகுல ஆரம்பப் பாடசாலை, மன்னார் கட்டுகாரன் குடிஇருப்பு றோமன் கத்தோலிக்க கலப்புப் பாடசாலை மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை நிறுவனங்களில் இடம்பெற்றன.
மேலும், இந்த நடமாடும் பல்மருத்துவ சேவை மூலம் கடற்படையின் நூற்று பதினைந்து (115) உறுப்பினர்களுக்கும் நூற்று எழுபத்தைந்து (175) பாடசாலை மாணவர்களுக்கும் சிகிச்சை வழங்கியதுடன், நல்ல வாய் சுகாதார அறிவை வளர்ப்பதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் கடற்படையினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.