கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஜூன் 19,) வடக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ் கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரத்த தேவைக்காக வைத்தியசாலைகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கட்டளை வைத்தியசாலை பணியாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் தெலிப்பளை ஆதார வைத்தியசாலை பணியாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த மாபெரும் சமூக சேவையை வெற்றியடையச் செய்ய வட கடற்படை கட்டளையை சேர்ந்த பெருந்தொகையான கடற்படையினர் இரத்ததானம் வழங்க முன்வந்தனர்.