ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
34 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூன் 13) ஓய்வு பெற்றார்.
இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் விராஜ் லீலாரத்ன அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.
1989 ஆம் ஆண்டில், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 07வது உள்வாங்கல் பிரிவில் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன, தனது 34 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது கேப்டன் மின் துறை (வடக்கு), கேப்டன் மின் துறை (தெற்கு), துணை அதிகாரி கப்பல்துறை (மின்சாரம்) கிழக்கு, பதில் கொமடோர் மின் மற்றும் மின் துறை (கிழக்கு), பாதுகாப்பு தலைமையக வளாக திட்ட மேலாளர் மின் பொறியாளர், கொமடோர் கப்பல்துறை (கிழக்கு), கடற்படை மற்றும் மின் இயக்குனர் பொறியியல் (திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள்), கொமடோர் மின் துறை (மேற்கு), இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் (மின், தொலைத்தொடர்பு மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல்), இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் (நிர்வாகம் மற்றும் பயன்பாடுகள்), இயக்குநர் கடற்படை மின் பயன்பாடுகள் மற்றும் பயோமெடிகல் இயக்குநர் பொது மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.