உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடற்படையினர் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்

இன்று (2024 ஜூன் 08,) ஈடுபட்டுள்ள 'எழுந்து, ஆழ்ந்து சிந்தித்து கடல் சூழலைப் பாதுகாக்க எங்களுடன் இணையுங்கள்' என்ற தொனிப் பொருளுக்கு அமைய உலகப் பெருங்கடல் தினத்துடன் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஆறுகம்பே கடற்கரையில் நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து கடற்படை கட்டளைகளையும் ஒன்றினைத்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்கவின் மேற்பார்வையில், உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஆறுகம்பே கடற்கரையில் இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான அதிகாரிகள், மாலுமிகள், ஆறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள், ஆறுகம்பே பிரதேச மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.