கடற்படையின் இரத்த தானத் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 06 ஜூன் 2024 அன்று வட மத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்ச்சி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர இரத்த தேவைகளுக்காக, குறித்த வைத்தியசாலைகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கட்டளை வைத்தியசாலை ஊழியர்கள், அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த மாபெரும் சமூகப் பணியை வெற்றியடையச் செய்வதற்காக வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவைச் சேர்ந்த பெருமளவான கடற்படையினர் இரத்ததானம் செய்ய முன்வந்தனர்.