இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது
கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவி மற்றும் வைத்தியசாலை சேவை சங்கத்தின் தலைவர் ராஜகீய பண்டித பூஜ்ய ராஜ்வெல்லே சுபூதி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட வைத்தியசாலை உபகரணங்களினால் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் 2024 ஜூன் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிறுவனத்தில் குறைபாடுவாக இருந்த இந்த புதிய சுகாதார வசதிகளை கடற்படையினரின் தொழில்நுட்ப பங்களிப்புடன் விரைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் கடற்படை வீரர்களுக்கு தேவையான அவசர சிகிச்சைகளை எளிதாக வழங்க முடியும்.
மேலும், இந்த நிகழ்வுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், கட்டளை வைத்திய அதிகாரி (தெற்கு) மற்றும் மருத்துவ பணியாளர்களும் கலந்து கொண்டனர்