இலங்கை கடற்படைக்கும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான முதலாவது சந்திப்பு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமுடன் (National Nuclear Security Administration of United State of America) 2024 பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கையின் எல்லைகளில் சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வது, ஆட்கடத்தலைக் கண்டறிதல் மற்றும் கைது செய்வதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டது இதன் அடிப்படை நோக்கம் குறித்து விவாதிப்பதற்கான இரண்டு நாள் கூட்டம் 2024 ஜூன் 03, ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

அதன்படி, இந்த அடிப்படை நோக்கம் குறித்து விவாதிப்பதற்கான இரண்டு நாள் கூட்டத்தின் முதல் நாளில், புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும், அந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் தேசிய அணு பாதுகாப்பு நிர்வாக மையத்தின் இலங்கை மேலாளராக பணியாற்றும் Michael Conner தலைமையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறித்த நிகழ்வுக்காக அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக மையத்தின் பிரதிநிதிகள் குழுவும், கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும், கடற்படையின் துணைப் பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.