கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் புத்திக லியங்கமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் புத்திக லியனகம இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக இன்று (03 ஜூன் 2024) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் பயிற்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய நியமனத்தின் கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதியாக கடமைகளை ஆற்றினார். பயிற்சி பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை மேற்பார்வையிட்ட கொமடோர் புத்திக ஜயவீர, பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் ரியர் அட்மிரல் லியனகமகேவிடம் நியமனத்தின் கடமைகளையும் பொறுப்புக்களையும் கையளித்தார்.