கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 மே 29,) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்படி, வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடகொழும்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்த இருப்பு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் மேற்கு கடற்படை கட்டளையினால் இந்த இரத்ததான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த மாபெரும் சமூகப் பணியை வெற்றியடையச் செய்வதற்காக, மேற்கு கடற்படைக் கட்டளையின் பெருமளவிலான கடற்படையினர் தன்னார்வமாக முன்வந்து பங்களிப்பை வழங்கியதுடன், இலங்கை கடற்படையின் மருத்துவ பணியாளர்கள் மற்றும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி குழுவின் ஆதரவுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.