தியவன்னா வெசாக் வலயத்தின் 3வது நாள் கடற்படைத் தளபதி தலைமையில் ஆரம்பமானது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திவவன்னா வெசாக் வலயத்தின் மூன்றாம் நாளை வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2024 மே 25 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிகழ்வின் நிகழ்வுகள் பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகியது. தியவன்னா வெசாக் வலயத்தில் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்லை பாதுகாப்பு அமைச்சின் வீதியில் முப்படையினரால் காட்சிப்படுத்தப்பட்ட வெசாக் வடிவமைப்புகள் மற்றும் அலங்காரங்களை கடற்படைத் தளபதி ஒளியேற்றினார். முப்படையினரால் முன்வைக்கப்பட்ட பக்திப் பாடல்கள் (வெசாக் பக்தி கீ) மற்றும் கலாச்சார நிகழ்வுகளால் வெசாக் வலயம் மேலும் வண்ணமயமானது.

மேலும், தியவன்னா வெசாக் வலயத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த வெசாக் வடிவமைப்புகளுக்கான பரிசில்களை வழங்கும் நிகழ்விலும் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்.

மேலும், இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகங்கள், முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், ஏனைய தரவரிசைகள் மற்றும் பெருந்தொகையான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.