வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் கோபுரத்தை திறந்து வைக்கும் விழா 2024 மே 23 ஆம் திகதி கோட்டே ரஜமஹா விகாரை வளாகத்தில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் வணக்கத்துக்குரிய மகா சங்கரத்திரனின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி அலுத்நுவர அநுருத்த தேரரின் தலைமையில் கடற்படையினரின் பூரண தொழிநுட்ப பங்களிப்புடன் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் அமைந்துள்ள தலதா மாலிகையின் புனரமைப்பு பணிகள் 2021 அக்டோபர் 11 ஆம் திகதி தொடங்கப்பட்டது. குறித்த புனரமைப்பு பணிகள் 2024 ஜூன் 11 ஆம் திகதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் தலதா மாலிகையின் கோபுரத்தை திறப்பதற்கான அர்ப்பணிப்பு விழா 2024 மே 23 ஆம் திகதி கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன், கோபுரத்தை திரைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி அலுத்நுவர அநுருத்த தேரர் தலைமையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வுகளிலும் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கெளரவ மகா சங்கத்தினர், பணிப்பாளர் நாயகம் மின் மற்றும் மின்னனு பொறியியலாளர் ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன, பதில் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் கொமடோர் ரவி குணசிங்க உட்பட கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட, இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்