கொமடோர் ரவி குணசிங்க கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ரவி குணசிங்க இன்று (2024 மே 21,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய நியமனத்தின் கடமைகளை பொறுப்பேற்கு முன், கொமடோர் ரவி குணசிங்க பணிப்பாளர் கடற்படை சிவில் பொறியாளராக கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தார். பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியாளராக பணியாற்றிய ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரியவினால் கொமடோர் ரவி குணசிங்கவிற்கு பதில் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் கடமைகளை ஒப்படைக்கப்பட்டது.