கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகச் செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஏப்ரல் 20) கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், கடற்படை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும், இந்த இரத்த தான நிகழ்ச்சி நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த விநியோகத்தை நிரப்புவதே இந்த முயற்சியின் முதன்மையான நோக்கமாகும்.

மேலும், இந்த உன்னத சமூகச் செயலை வெற்றியடையச் செய்வதற்காக, கிழக்கு கடற்படைக் கட்டளையின் அனைத்துக் கப்பல்களும், கடற்படைத் தளத்தைச் சேர்ந்த பெருந்தொகையான கடற்படை வீரர்களும் முன்வந்து பங்களித்ததுடன், கிழக்குக் கட்டளை கடற்படை மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி குழுவினர் உதவி வழங்கினர்.