பத்தரமுல்லை போர்வீரர் நினைவுத் தூபியை முன்னிட்டு கௌரவ பிரதமர் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்
பாதுகாப்பு அமைச்சும், போர்வீரர் சேவை அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருட தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீர,வீராங்கனைகள் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதற்கான உன்னத நோக்கத்துடன் நாட்டின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் சி றப்புப் போர்ப்பறை இசைக்கப்பட்டது.
பின்னர், தேசத்தின் உச்சபட்ச சுதந்திரத்திற்காக, மனிதாபிமான நடவடிக்கையின் போது, உயிர் தியாகம் செய்து, காணாமல் ஆக்கப்பட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் ரணவிரு நினைவுச் சின்னத்தில் மலர்க்கொத்து அணிவித்தார். இனைத்தொடர்ந்து மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிக்கு பங்களித்த அக்கால இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளின் பிரதானிகளாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படையில், அட்மிரல் வசந்த கர்ணகொட மற்றும் விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர்க்கொத்து அணிவித்தனர்.
மேலும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஆயுதப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் முறையே படைவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் ரணவிரு நினைவுத்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் 2024 ரணவிரு கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.