கடற்படையினர் மூலம் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் விழிப்புணர்வு பயிற்சியை திருகோணமலையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி 2024 முதல் காலாண்டில் திருகோணமலை அஷ்ரோஃப் ஜெட்டியில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சியை நடத்த கடற்படையினரால் திட்டமிடப்பட்டது.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளை இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இரசாயன அபாயங்கள் பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது.
இங்கு கோட்பாட்டு பயிற்சி அமர்வின் போது, இரசாயன அபாயங்களை அடையாளம் காணுதல், பாதுகாப்பு முறைகள் மற்றும் மீட்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்ட போது மேலும் நடைமுறை அமர்வில் அவசர இரசாயன ஆபத்து ஏற்பட்டால் தொடர்புடைய பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை சரியான முறையில் கையாளுதல், நபர்களை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல் அபாயகரமான இரசாயன கலவைகளை பாதுகாப்பாக அகற்றும் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த பயிற்சிக்கு பங்குதாரர்களான திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை, இலங்கை துறைமுக அதிகாரசபை, பிரைமா லங்கா தனியார் நிறுவனம், டோக்கியோ சீமெந்து தனியார் நிறுவனம் மற்றும் ஓஷன் பீக் தனியார் நிறுவனம் ஆகிய பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டது.
மேலும், இரசாயன பேரழிவை நிர்வகிப்பதில் அனைத்து தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை கடற்படை வலியுறுத்தியது, மேலும் இதுபோன்ற பயிற்சிகள் மூலம் பங்குதாரர்களில் புதிய அறிவு மற்றும் திறன்களும் மேம்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பேரழிவுகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும்.