ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாரு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு வரப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனில் செயல்படும் கூலிப்படைகளுக்கு நியமிக்கப்படுகின்றது. மேலும், அவர்களுக்கு அதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்படுவதில்லை, கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடினமான மற்றும் கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரியவந்துள்ளது மற்றும் அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து அங்கு எந்தவித ஆதரவின்றி இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி, தாய்நாட்டுக்குப் பல ஆண்டுகளாகப் பெருமை சேர்த்து பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரராகச் சம்பாதித்த அனைத்துச் சலுகைகளையும், சொத்துக்களையும் இந்த மனித கடத்தலில் சிக்கி இழக்காமல், கடைசியில் தனது சக ஊழியர்களோ, நெருங்கிய குடும்பத்தாரோ உதவியின்றி வெளிநாட்டு நிலத்தில் தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தை தவிர்க்க அனைத்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கும் கடற்படை வலியுறுத்துகிறது.
மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுகின்ற நபர்கள், செயலில் உள்ள இராணுவத்தினர் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் ஏனையவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் கடற்படை தலைமையக தொலைபேசி இலக்கமான 0117192142 அல்லது 0117192250 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.