கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கான ஒரு நாள் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது
கடற்படையின் அனைத்துக் பிரிவுகளின் மூத்த மாலுமிகள் (Branch Head Sailors), நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டாளர்கள், சிரேஷ்ட கடற்படைத் தலைவர்கள், பயிற்சிப் பாடசாலைகளில் தலைமை பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பட்டறையொன்று 2024 மே 03 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2024 ஜனவரி 24 ஆம் திகதி முதல் 2024 மார்ச் 12 ஆம் திகதி வரை மேற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் தலைமை சிரு அதிகாரி (MCPON) நடத்திய கண்காணிப்பு சுற்றுப்பயணங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளை கருத்திற்கொண்டு பணிப்பாளர் நாயகம் நபர்கள் திணைக்களத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கடற்படையின் பணிப்பாளர் நாயகம் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடற்படையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் நேர்மறையான அணுகுமுறைகளை வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு விரிவுரையை நிகழ்த்தினார். இதற்கு மேலதிகமாக, மாலுமிகளின் ஒழுங்கீன நடவடிக்கைகள், மாலுமிகளை ஆட்சேர்ப்பு செய்தல், நிறுவனங்களில் மனிதவள முகாமைத்துவம், பதவி உயர்வுகள், கடற்படையின் நலன்புரி வசதிகள், பதிவு பரீட்சைகளை நடத்துதல், பிரதேச அமைப்பை முறையாகப் பேணுதல் ஆகிய தலைப்புகளில் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் விரிவுரைகளை வழங்கினர். மாலுமிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மாலுமிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதம சிரு அதிகாரி (MCPON) டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார அவர்கள் உரை நிகழ்த்தினார்.