இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில் இடம்பெற்றது
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்கு (Seminar on India - Sri Lanka Defence Co-Operation) 2024 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகல்விள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
இதன்படி, இந்த மாநாட்டில், இலங்கையின் ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விளக்கக்காட்சிகளின் மூலம் பங்குதாரர்களிடையே கருத்துகளை பரிமாறிக்கொண்டன.
மேலும், இந்த நிகழ்வுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் (H.E Santosh Jha), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், இந்திய மற்றும் இலங்கை தொழில்முனைவோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.