மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு மின்சார சக்கர நாற்காலிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன
மனிதாபிமான நடவடிக்கையில் பங்களித்து கால்களை இழந்த கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் மேலும் மூன்று கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் மின்சார சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஓயாமடுவ கடற்படை அதிகாரிகள் ஓய்வு விடுதி வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவி வந்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பேணிக்காப்பதற்காக போர்வீரர்கள் தஞ்சம் புகுந்து உயிர் தியாகம் செய்தனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது கால்களை இழந்த குறித்த போர் வீரர்களுக்கு செயற்கைக் கால்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை ரணவிரு சேவா அதிகார சபை அமுல்படுத்தியுள்ளது.
இதன் கீழ், கடற்படை நலன்புரி திணைக்களம் மற்றும் கடற்படை சமூக சேவை நிதியத்தின் பங்களிப்புடன் கால்களை இழந்த கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முதற்கட்டத்தின் கீழ் மூன்று (03) கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் மின்சார சக்கர நாற்காலியொன்று வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன மற்றும் சிரேஷ்ட, இளநிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.