IORA தினம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

IORA தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான இந்தியப் பெருங்கடல்' (Sustainable Indian Ocean for Future Generations) என்ற தொனிப்பொருளின் கீழ், காலி முகத்துவாரத்தில் கடல் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்காட்சியொன்று இன்று (2024 மார்ச் 10) ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

2023 முதல் 2025 வரை (Indian Ocean Rim Association (IORA) தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கும். மார்ச் 10ஆம் திகதி ஈடுபடும் இந்தியப் பெருங்கடல் IORA சங்க தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சிக்காக, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் 06 காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்தன. இங்கு கடற்படையின் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம், பவளப்பாதுகாப்பு திட்டம்,கடற்படை ஆட்சேர்ப்பு, கடலோர காவல் துறையின் செயல்பாடுகள், நீரியல் செயல்பாடுகள் மற்றும் கடற்படை சுழியோடி நடவடிக்கைகள் ஆகிய காட்சிக்கூடங்களும் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையின் பணி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கற்பித்தல் மற்றும் ஈடுபடுத்துதல் ஆகிய காட்சிக்கூடங்கள் பாடசாலை மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

அத்துடன், அதற்காக தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 700 பாடசாலை மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு கொழும்பு துறைமுக நகரைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்பயணத்தை மேற்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வை வண்ணமயமாக்கும் வகையில், காலி முகத்துவாரத்தில் ஆயுதப்படை மற்றும் பொலிஸாரால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், கடற்படை பாராசூட் குழுவும் பாராசூட் காச்சிகளில் இணைந்து கொண்டது. இந்நிகழ்வு கடற்படை இசைக்குழு மற்றும் கலாச்சார நடனக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளாலும் வண்ணமயானது.