இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண பதவியேற்பு
இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண இன்று (2024 பிப்ரவரி 20) இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக தொண்டர் கடற்படை தலைமையகத்தில் பதவியேற்றார்.
ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரணவை கடற்படை மரபுப்படி தொண்டர் கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்ற பின்னர், தொண்டர் கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சமன் பெரேரா, தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து புதிய தளபதியிடம் கடமைகளை கையளித்தார்.
மேலும், தொண்டர் கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் பாராட்டப்பட்ட பின்னர், கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் சமன் பெரேரா தொண்டர் கடற்படைத் தலைமையகத்திலிருந்து பிரியாவிடை பெற்றார்.