இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான (Indo- Pacific) பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. Marc ABENSOUR அவர்கள் இன்று (2024 பிப்ரவரி 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதன்போது, இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் Military Technical Cooperation Officer in charge of maritime safety, Commander Jean – Baptiste TROUCHE மற்றும் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிரான்ஸ் தூதுவருக்கு கடற்படைத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.