ஈரானிய கடற்படைக்கு சொந்தமான IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு தீவில் இருந்து புறப்பட்டுள்ளது
2024 பெப்ரவரி 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த ஈரானிய கடற்படையின் IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 பிப்ரவரி 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்படும் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி பிரியாவிடை வழங்கினர்.
IRINS ‘Bushehr’ கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் MAHDI BALVARDI மற்றும் ‘Tonb’ கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் MOHAMMAD HAJI ZADEH ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா மற்றும் பணிப்பாளர் நாயகம் கடற்படை நடவடிக்கை ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் ஆகியோரை உத்தியோகபூர்வமாக மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் மற்றும் கடற்படை தலைமையகத்தில் சந்தித்தனர். அந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அவர்கள் நினைவு பரிசுகளும பரிமாறிக்கொண்டனர்.
மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கெடட் அதிகாரிகளுக்கு குறித்த கப்பல்களின் செயல்பாடுகளை அவதானிக்க வாய்ப்பு கிடைத்தது, மேலும் கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் கடற்படை, தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் கல்லூரியின் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், இந்த கப்பல்கள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், குறித்த கப்பல்களில் கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்கும் சென்றனர். மேலும், இந்த கப்பல்களை அவதானிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்) மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.