மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் (Chief of Defence Force of Maldives National Defence Force (MNDF) Lieutenant General Abdul Raheem Abdul Latheef) இன்று (08 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இதன்படி, மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையின் பிரதானியை இராணுவ மரபுகளுக்கமைய விசேட மரியாதை செலுத்தி கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பிரதித் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபையை அறிமுகப்படுத்தினார்.

கடற்படைத் தளபதி மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை பிரதானி ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.